Friday, May 20, 2011

*யதிநாயகாஷ்டகம்

பூஜ்ய ஸ்ரீ ஓம்காரானந்தர் அவர்கள்.


श्रि गुरुब्यो नमः
यतिनायकाष्टकम्

ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் அவர்களின் சிறப்பை விளக்கும் வகையில் அவரது சீடர்களில் ஒருவரான பூஜ்ய ஸ்ரீ ஸ்வாமி ஓங்காரானந்தர் அவர்கள் 1986-ஆம் ஆண்டு இயற்றியது.

चिद्बवानन्द-योगीन्द्रं शिवज्ञानप्रदं गुरुम् ।
शिष्यै: पूजित-पादाब्जं वन्देऽहं यतिनायकम् ॥ 1 ॥

சித்பவானந்த-யோகீந்த்ரம் ஷிவஞானப்ரதம் குரும் |
சிஷ்யை: பூஜித-பாதாப்ஜம் வந்தேऽஹம் யதிநாயகம் || 1 ||

          சித்பவானந்தர் (எனும் பெயருடைய) தலைசிறந்த யோகியை, சிவஞானம் வழங்கி அருளுகின்ற குருவை, சீடர்களால் வழிபடப்படுகின்ற தாமரைத் திருவடிகளை உடையவரை, துறவிவேந்தரை நான் வணங்குகிறேன்.

मन्दस्मित-मुखांभोजं महापुरुषसेवकम् ।
मात्रुभूतेश-भ्क्तं तं वन्देऽहं यतिनायकम् ॥ 2 ॥

மந்தஸ்மித-முகாம்போஜம் மஹாபுருஷ ஸேவகம் |
மாத்ருபூதேஷ-பக்தம் தம் வந்தேऽஹம் யதிநாயகம் || 2 ||

          புன்முறுவல் பூத்த தாமரை போன்ற முகத்தை உடையவரை, மஹாபுருஷரின் ஸேவைகரை, தாயுமானவரின் பக்தரை, துறவிவேந்தரை நான் வணங்குகிறேன்.

अन्तर्योग-प्रदातारं अनेकाद्भुत दर्शिनम् ।
आत्मज्ञानोपदेष्टारं वन्देऽहं यतिनायकम् ॥ 3 ॥

அந்தர்யோக-ப்ரதாதாரம் அநேகாத்புத தர்ஷினம் |
ஆத்மஞானோபதேஷ்டாரம் வந்தேऽஹம் யதிநாயகம் || 3 ||

          அந்தர்யோகத்தைச் சிறப்பாக (சமுதாயத்திற்கு) வழங்கி அருளியவரை, அநேக அற்புதங்கள் நிகழ்த்தியவரை, ஆத்ம ஞானத்தை உபதேசிப்பவரை, துறவிவேந்தரை நான் வணங்குகிறேன்.

गीताव्याख्यान-कर्तारं गीर्वाणीं सुष्टु रक्षितम् ।
गतिप्रसाद-दातारं वन्देऽहं यतिनायकम् ॥ 4 ॥

கீதாவ்யாக்யான-கர்த்தாரம் கீர்வாணீம் ஸூஷ்டு ரக்ஷிதம் |
கதிப்ரஸாத-தாதாரம் வந்தேऽஹம் யதிநாயகம் || 4 ||

          கீதைக்கு அருள்விளக்கம் வழங்கியவரை (செய்தவரை) ஸம்ஸ்க்ருதத்தை நன்கு பாதுகாத்தவரை, முக்தியை ப்ரஸாதமாக வழங்குபவரை, துறவிவேந்தரை நான் வணங்குகிறேன்.

विवेकानन्द-सन्देशं विश्वं दत्वोपकारिणम् ।
विरागज्ञानदातारं वन्देऽहं यतिनायकम् ॥ 5 ॥

விவேகானந்த-ஸந்தேஷம் விஷ்வம் தத்வோபகாரிணம் |
விராகஞானதாதாரம் வந்தேऽஹம் யதிநாயகம் || 5 ||

         விவேகானந்தரின் செய்தியை உலகுக்கு வழங்கி நன்மை புரிந்தவரை, பற்றின்மையையும் மெய்யுணர்வையும் அருள்பவரை, துறவிவேந்தரை நான் வணங்குகிறேன்.

शारदायाऽनुग्रहीतं साधकानुग्रहकारिणम् ।
शारदाठ-प्रतिष्ठारं वन्देऽहं यतिनायकम् ॥ 6 ॥

ஷாரதயாஅநுக்ரஹீதம் ஸாதகாநுக்ரஹகாரிணம் |
ஷாரதாமட-ப்ரதிஷ்டாரம் வந்தேऽஹம் யதிநாயகம் || 6 ||

          ஸ்ரீ சாரதா தேவியாரின் அருளைப் பெற்றவரை, சாதர்கர்களுக்கு அருள்புரிபவரை, ஸ்ரீ சாரதா மடத்தை (ஸமிதியை) நிறுவியவரை, துறவிவேந்தரை நான் வணங்குகிறேன்.

रामक्रुष्ण-प्रभक्तं तं रामक्रुष्णानुसारिणम् ।
रामायणस्य तत्त्वञं वन्देऽहं यतिनायकम् ॥ 7 ॥

ராமகிருஷ்ண-ப்ரபக்தம் தம் ராம்க்ருஷ்ணானுஸாரிணம் |
ராமாயணஸ்ய தத்த்வக்ஞம் வந்தேऽஹம் யதிநாயகம் || 7 ||

          ஸ்ரீ ராமகிருஷ்ணர் மீது பேரன்பு பூண்டவரை, ஸ்ரீ ராமக்ருஷ்ணர் வழி நடப்பவரை, ராமாயண தத்துவத்தை நன்கு உணர்ந்தவரை, துறவிவேந்தரை நான் வணங்குகிறேன்.

परमहंस-प्रशिष्यं तं परं ब्रह्मेति शोभितम् ।
भक्तकल्मष-हन्तारं वन्देऽहं यतिनायकम् ॥ 8 ॥

பரமஹம்ஸ-ப்ரசிஷ்யம் தம் பரம்ப்ரஹ்மேதி ஷோபிதம் |
பக்தகல்மஷ-ஹந்தாரம் வந்தேऽஹம் யதிநாயகம் || 8 ||

          
          பரமஹம்சரின் சிஷயருடைய சிஷ்யரை, (நான்) பரப்ரஹ்மம் என்று உணர்ந்து ஒளிர்பவரை, பக்தர்களின் குறைகளை நீக்குபவரை, துறவிவேந்தரை நான் வணங்குகிறேன்.

आनन्दमानन्दकरं प्रसन्नं बोधस्वरूपं निजभावयुक्तम् ।
योगीन्द्रमीड्यं भवरोगवैद्यं श्रीचिद्भवानन्दगुरुं नमामि ॥ 

ஆனந்தமானந்தகரம் ப்ரசன்னம் போதஸ்வரூபம் நிஜபாவயுக்தம் |
யோகீந்த்ரமீட்யம் பவரோகவைத்யம் ஸ்ரீ சித்பவானந்த குரும் நமாமி ||

          இன்ப உருவினரை, பேரின்பத்தை வழங்கியருள்பவரை, தெளிவானவரை, அறிவுருவாய் விளங்குபவரை, மெய்யுணர்வில் தோய்ந்திருப்பவரை, துறவிவேந்தர்களால் போற்றப்படுபவரை, பிறவிப்பிணி மருத்துவரை, தூய உணர்வு தூய இருப்பு தூய இன்ப உருவான தெய்வீக அருள் குருவை (என்றென்றும்) வணங்குகிறேன்.

No comments:

Post a Comment