Saturday, July 16, 2011

*கொள்கையில் உறுதி

ஆசிரியர் பயிற்சிப் பள்ளி ஒன்று 1956ஆம் வருடம் திருப்பராய்த்துறையில் பெரிய சுவாமிஜியால் துவங்கப்பட்டது. மாணவமணிகளை உருவாக்கும் ஆசிரியர்களின் பயிற்சியில் சுவாமிகள் தனி அக்கரை காட்டினார். கண்டிப்பும், கடும் உழைப்பும் அங்கு வலியுறுத்தப்பட்டது. ஒழுக்கமும், உயரிய தத்துவமும்கூட அங்கு போதிக்கப்பட்டன.

தினசரி சாப்பிடுவதற்குமுன் பிரம்மா அர்ப்பணம் என்ற பிரார்த்தனைப் பாடலை சொல்லி இறைவனை வழிபடும் முறையும் இருந்து வந்தது. இது பிடிக்காத உள்ளூர்வாசிகள் பயிற்சியாளர்களைத் தூண்டிவிட்டனர். ‘பிரம்மா அர்ப்பணம் சொல்லமாட்டோம்’ என்று மறுப்புக் குரல் எழுந்தது. சுவாமிஜி எடுத்த கொள்கையில் உறுதியாக நிற்பவர். “இன்று இதை சொல்ல மறுப்பவர்கள் நாளை எப்படிப்பட்ட மாணவர்களை உருவாக்குவார்கள்?” என்று கூறிய சுவாமிஜி, அப்படி ஒரு பயிற்சி தேவையில்லை என்று நினைத்தார் போலும். அந்த வருடத்துடன் அப்பயிற்சிப் பள்ளியை மூடிவிட்டார்.

No comments:

Post a Comment